Skip to content

கிருஷ்ணராயபுரம் அருகே 2 பஸ்கள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி

கிருஷ்ணராயபுரம் அருகே தரகம்பட்டி பகுதியில் ஒரே நேர்கோட்டில் சென்ற இரண்டு அரசு பேருந்துகள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி.

கரூர் மாவட்டம், கரூர் பேருந்து நிலையத்திலிருந்து இன்று மாலை கரூர், புலியூர், மைலம்பட்டி, தரகம்பட்டி, வையம்பட்டி, வழியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை வரை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

அந்த பேருந்து திடீரென தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பழுதாகி நின்றது. இதனால் பேருந்தில் பயணித்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் குறிப்பிட நேரத்தில் பயணம் செய்ய முடியாமல் தவித்தனர்.

இதே போல் மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து வையம்பட்டி, தரகம்பட்டி, மையிலம்பட்டி, புலியூர் வழியாக கரூர் சென்ற அரசு பேருந்தும் தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பழுதாகி நின்றது.

ஏற்கனவே கரூரில் இருந்து மணப்பாறை சென்ற அரசு பேருந்தும் பழுதாகி நின்றது.

இந்நிலையில் மணப்பாறையில் இருந்து கரூர் சென்ற அரசு பேருந்தும் ஒரே இடத்தில் பழுதாகி நின்றதால் நேர்கோட்டில் எதிரெதிரே வந்த உறவினர்கள் மற்றும் பேருந்து பயணிகள் அவதி அடைந்தனர்.

ஒரே நேரத்தில் நேர்கோட்டில் சென்று கொண்டிருந்த இரு அரசு பேருந்துகள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் பாதிப்படைந்ததுடன் அதிர்ச்சி அடைந்தனர்.

error: Content is protected !!