கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மஹாலில் பள்ளப்பட்டி எகனாமிக் சேம்பர் அமைப்பின் சார்பில் “உன்னால் முடியும் தோழா” நிகழ்ச்சியில் முன்னால் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
பின்னர் சிறப்பாக சேவை புரிந்த மாணவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளங்கிய மாணவர்களுக்கு கேடயம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவடைந்த பின்பு மாணவர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆதிநாராயணன் கடந்த மூன்று ஆண்டுகள் முன்பாக எனக்கு ஐபிஎஸ் ஆக ஆசை இருக்கிறது உங்களை நேரில் ஒருமுறை சந்திக்க வேண்டும் என்ற கடிதத்தை வழங்க மூன்று ஆண்டுகளாக காத்திருந்த மாணவன் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னால் டிஜிபி இடம் வழங்கினார் பின்னர் அந்த கடிதத்தில் தன் கைப்பட
மாணவன் வழங்கிய கடிதத்தில் உங்களைச் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், உங்களின் படைப்பாற்றலை இங்கு சிறந்த எதிர்காலமாக நான் பாராட்டுகிறேன் என்று அவர் கைப்பட எழுதி கடிதத்தை மீண்டும் மாணவனிடம் வழங்கினார்.
முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பையில் மகாராஷ்டிரா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களை விட தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது அதற்கு காரணம் என்ன சார் என்று சிறுவன் கேட்டதற்கு சைலேந்திரபாபு கூறுகையில் தமிழ்நாடு போலீஸ் புலிகள் மாதிரி குற்றங்கள் நடக்க விடமாட்டார்கள் எனவும், ஆன்லைன் குற்றங்களை அதிகம் விசாரித்தால் அந்த தொலைபேசி எண்கள் அசாம், சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் காட்டும், நான் டிஜிபி ஆக இருந்தபோது சைபர் கிரைம் தனி அலுவலகம் வைத்து தீவிரமாக கண்காணித்து போன் கால்களை டிராக் செய்து அவர்கள் வங்கி கணக்கை ஃப்ரீ செய்து விடுவோம் நான் பலமுறை சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பதிவுகள் பதிவு செய்துள்ளேன் இருந்தாலும் செல்போன்களில் மக்கள் அதிக அளவு பயன்படுத்துவதால் குற்றங்கள் நடைபெற்று தான் வருகிறது எனவும், சமுதாயத்தில் மாற்றம் வேண்டும் என்றால் யாரும் பொய் சொல்லக்கூடாது என்று சொல்வதைவிட நாம் பொய் சொல்லாமல் இருக்க வேண்டும். அதேபோன்று சைபர் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என கேள்வி கேட்ட மாணவனுக்கு விளக்கம் அளித்தார்.