Skip to content

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பஸ் ஸ்டாண்ட் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையோரம்அரசு இடத்தில் விநாயகர்கோயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த ஆலயத்தின் முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பேருந்து ஏறுவதற்கு வசதியாக கலைஞர் நூற்றாண்டு நினைவு நிழலகம் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் நிதி பெறப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து மீண்டும் பணிகள் துவங்கிய போது பொதுமக்கள் தடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டசரவணன் என்பவரை போலீசார் நிலையம் அழைத்துச் சென்றனர். பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் பத்து நிமிடம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!