Skip to content

இவரு எப்ப தலைவர் ஆனாரு? பஞ். தலைவரின் கணவர் அலப்பற…… மருதூர் மக்கள் கோபம்

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, மருதூர் ஊராட்சியில் தலைவராக இருந்து வந்த தினேஷ் என்பவர் அரசு பணி கிடைத்ததன் பேரில் தனது பதவியை முறையாக ராஜினாமா செய்தார். இதனையடுத்து துணைத்தலைவராக இருக்கும் கௌசல்யா என்பவர் தற்போது பொறுப்பு தலைவியாக பணி செய்து வருகிறார். இந்நிலையில் கௌசல்யாவின் கணவர் அசோகன் ஊராட்சி நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளிலும் முடிக்கப்பட்ட பணிகளிலும் பெயர் பலகையில் அவர் பெயரை தலைவர் என பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மருதூர் ஊராட்சியில் 38.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டிடத்திலும் ஊராட்சி தலைவர் என அசோகன் பெயர் எழுதப்பட்டிருக்கிறது என தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வார்டு கவுன்சிலர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!