Skip to content
Home » விண்ணில் பாய்ந்தது PSLV-C59 ராக்கெட்…

விண்ணில் பாய்ந்தது PSLV-C59 ராக்கெட்…

  • by Authour

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்து இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து டிசம்பர்.4 மாலை4.08 மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் விண்ணில் ஏவப்பட விருந்தது. இதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இறுதிகட்ட சோதனைகளில் ப்ரோபா-3 செயற்கைக்கோளில் சில தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ராக்கெட் ஏவுதல் டிச.5  மாலை 4.04 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், பிஎஸ்எல்வி சி-59 செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *