கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி அவர் வளர்ந்த நகரமான திருவாரூரில் கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் அதிநவீன பன்னோாக்கு உயர் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டு உள்ளது. இவற்றை கருணாநிதி பிறந்த நாளையொட்டி திறந்து வைக்க வரும்படி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி திரவுபதி முர்முவை டில்லியில் சந்தித்து கேட்டுக்கொண்டார். இதை ஏற்ற ஜனாதிபதி ஜூன் 5ம் தேதி
தமிழகம் வந்து மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக உறுதி அளித்தார். முதல்வர் , ஜனாதிபதியை சந்தித்தபோது, கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை ஜனாதிபதிக்கு பரிசளித்தார்.