Skip to content

வக்பு திருத்த மசோதாவை கண்டித்து…. தமிழகம் முழுவதும் ஏப்.18ம் தேதி ஆர்ப்பாட்டம்… முஸ்லீம் லீக்..

வக்பு திருத்த மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப் 18 – ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர்மொகிதீன் கூறினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர்மொகிதீன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் தேசிய தலைவர் கே..எம். காதர் மொய்தீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வக்பு வாரிய மசோதா தொடர்பாக தொடர்ந்த அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு வருகிறது. வக்பு சட்டத்தை ஒத்தி போடவோ தடை விதிக்கவோ உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஏப்ரல் 18 – ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. உச்சநீதிமன்றம் சாதகமாக பதில் கொடுக்குமானால் போராட்டங்கள் தவிர்க்கப்படும். வருகிற சட்டமன்ற தேர்தலில் 8 தொகுதி கேட்க வேண்டும் என்று எங்கள் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். ஆளுநர் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் ஆளுநர் பதவி வகித்து வருகிறார். அவர் நீடிக்க மத்திய அரசுதான் காரணம். வக்பு திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது. அது எங்கே போய் முடியும் என தெரியவில்லை. இதில் கண்டிப்பாக உச்ச நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம் . இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் ஷாஜகான், மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துல்ரஹ்மான், மாநில துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான நவாஸ்கனி எம்.பி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கேரள மாநிலம் கலந்து கொண்டனர். கூட்டத்தில்
வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில், மசோதா நிறைவேற்றுவதோடு உச்சநீதிமன்றத்திலும் திமுக வழக்கு தாக்கல் செய்து இருப்பதற்கு முதல்வருக்கும், ஆதரவளித்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி தெரிவிப்பது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ்நாடு சார்பில் மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு மாநாட்டை டிசம்பர் மாதம் 28 -ந் தேதி கும்பகோணம் அடுத்துள்ள சுவாமி மலையில் நடத்துவது, வருகிற 16-ந் தேதி கேரளா மாநிலத்தில் பேரணி மற்றும் கண்டன கூட்டம் நடத்துவது உட்பட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

error: Content is protected !!