மயிலாடுதுறை கச்சேரி சாலையில் அமைந்துள்ள பிரபல பிரியாணி கடை ஒன்றில் சுகாதார ஆய்வாளர் பிருந்தா நகரமைப்பு உதவியாளர் முருகராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வுக்கு சென்றனர். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி பிருந்தா, முருகராஜ் ஆகிய இருவர் மீதும் தாக்குதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார ஆய்வாளர் பிருந்தா அளித்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளின்கீழ் கடை உரிமையாளர் அஃபில், அமீர் மற்றும் சிலர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் அனைத்து நிலை ஊழியர்கள் இன்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண் அதிகாரி மீது தாக்குதல்… கைது செய்ய கோரி மயிலாடுதுறையில் போராட்டம்…
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/mayiladurai-woman-attack-930x620.jpg)