Skip to content

பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி… திருச்சியில் தவெக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாநகர் மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி சார்பாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள வழி விடு முருகன் கோவில் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான தொடர் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவும், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி கோஷமிட்டனர்.

இந்த நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் பகுதி ஒன்றிய வார்டு கிளை நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரா, துணைச் செயலாளர் சாந்த ஷீலா, மகளிர் அணி அமைப்பாளர் ரேவதி, செயற்குழு உறுப்பினர் கல்பனா, ஐஸ்வர்யா, சங்கீதா, மேனகா மற்றும் மகளிர் வினையைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…

error: Content is protected !!