மத்திய அரசின் மூன்று புதிய சட்டங்களை கண்டித்து, வழக்கறிஞர்கள் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று புதிய சட்டங்கள் மூலம் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாகவும் எளிதில் புரியாத வகையில் சட்டம் இருப்பதாகவும் கூறி தொடர் போராட்டங்களை வழக்கறிஞர்கள் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதே பகுதியில், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய 3 சட்டங்களை வரவேற்கும் விதமாக பாஜக வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர்கள் லட்டுகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.