திருச்சி திருவெறும்பூர் காட்டூர் அம்மன் நகர் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக திருச்சி எஸ்பி தனி படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் எஸ்பி‘ தனி படை போலீசார் அதிரடியாக அந்த மசாஜ் சென்டரில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு 3 பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது.எனவே அந்த பெண்களையும், அவர்களை
விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக 3 ஆண், 3 பெண்களையும் போலீசார் கைது செய்து அவர்களை திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
அதைத்தொடர்ந்து திருவெறும்பூர் தாசில்தார் ஜெயப்பிரகாசம் முன்னிலையில் அந்த மசாஜ் சென்டருக்கு போலீசார் சீல் வைத்தனர். இது சம்பந்தமாக அந்த கட்டிடத்தின் உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் ஒரு கட்டிடத்தில் துணை நடிகைகள் சிலா விபசாரம் செய்ததாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.