உலக போதை பொருள் ஒழிப்பு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் சப்டிவிசனல் காவல்துறை சார்பில் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.
திருச்சி மாவட்ட எஸ் பி சுஜித் குமார் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் முன்னிலை வகித்தார். பேரணியில் துவாக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோசமிட்டும் துவாக்குடி அண்ணா வளைவில் இருந்து வஉசி நகர் வரை சென்று மீண்டும் துவாக்குடி அண்ணா வளைவை அடைந்தனர்.
பேரணிக்கு முன்னதாக அங்கு வைக்கப்பட்டிருந்த சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின பேனரில் , திருச்சி எஸ்பி சுஜித் குமார் கையொப்பமிட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மற்றவர்களும் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில், திருவெறும்பூர், துவாக்குடி, திருவெறும்பூர் போலீசாரும் கலந்து கொண்டனர்.