Skip to content
Home » பேராசிரியர் மனைவி மர்ம சாவு.. உறவினர்கள் மறியல்..

பேராசிரியர் மனைவி மர்ம சாவு.. உறவினர்கள் மறியல்..

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள நெடுங்குளம் ஊராட்சி, வேட்டுப்பட்டி செம்பான்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் கார்த்திக் ராஜ்குமார்(35). சங்ககிரி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். இவருக்கும், கரூர் நொய்யல் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு மகள் சுந்தரேஸ்வரி(29) என்பவருக்கும், கடந்த 4 வருடத்திற்கு முன் திருமணமானது. இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை தீபா, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் தண்ணீரில் தவறி விழுந்து இறந்து விட்டது.

இதனால் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனிடையே, ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த சுந்தரேஸ்வரி, உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து தகவலறிந்த தங்கவேலு, தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக பூலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று, சுந்தரேஸ்வரியின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், கார்த்திக் ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும், இடைப்பாடி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *