திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்யகோரி எஸ்டிபிஐ நடத்திய மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் நடந்தது. மாவட்ட தலைவர் சாகுல்அமீது தலைமைதாங்கினார். இதில்கலந்துகொண்ட மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் பேசியதாவது:
பாஜக ஒரு சராசரியான அரசியல்கட்சியே அல்ல.அது இந்த நாட்டின் மலைகளையும் ஆறுகளையும் கனிம வளங்களையும் இந்த மண்ணையும் மக்களுடைய எதிர்காலத்தையும் எல்லாவற்றையும் சூனியமாக்கி பெருமுதலாளிகளிடம் ஒட்டுமொத்தமாக ஒப்படைத்துவிடுவதற்கான முதலாளிகளின் கட்சி. நம் மக்களை எல்லாம் சூத்திரர்களாக பஞ்சமர்களாக திரும்ப ஒடுக்கி ஆங்கிலேயர் காலத்திலும் அம்பேத்கர் காலத்திலும் அரசியல் சட்டம் அள்ளித்தந்திருக்கக்கூடிய அந்த உரிமைகளையும் பறித்தெடுக்க உள்ளனர் , நம்மை சூத்திரர்களாக பஞ்சமர்களாக இந்து ராஷ்ட்டிரத்தில் அடக்கக்கூடிய அந்த குறிக்கோளை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய கட்சிதான் பாரதிய ஜனதா கட்சி, அதனை இந்த நாட்டில் விடக்கூடாது
இவ்வாறு அவர் பேசினார்.