Skip to content
Home » கரூர் கோல போட்டியில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசு…

கரூர் கோல போட்டியில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர், கலைஞர் நகர் பகுதியில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு விழாவை ஒட்டி பெண்களுக்கான கோலப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டிகள், இளம் பெண்கள், சிறுமிகள் என 50-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று பல வண்ணங்களில் கோலங்களை வரைந்திருந்தனர். பொங்கல் பானை, கரும்பு, மாடு, தோகை மயில், ரங்கோலி கோலங்கள் என விதவிதமான வகையிலான கோலங்களை

அழகாக வரைந்திருந்தனர். கோலப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று போட்டி போட்டு கோலங்கள் வரைந்த பெண்களுக்கு வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் பங்கேற்று கோலங்களை பார்வையிட்டு, போட்டி குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட சிறப்பான கோலங்களை வரைந்த பெண்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, நான்காம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசு என 50-க்கும் மேற்பட்டோருக்கு சில்வர் பாத்திரங்களை பரிசாக வழங்கினார். பரிசளிப்பு விழாவின் போது வெற்றி பெற்ற பெண்களின் பெயர்களை போட்டி குழுவினர் அறிவிக்கும்போது, இளம் பெண்கள் துள்ளி குதித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.