கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதன் மூலம் அவர் முதல் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். அவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பா.ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி கடந்த சில நாட்களாக அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
வயநாட்டில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் பிரியங்கா காந்தி ஈடுபட்டுள்ளார். வயநாடு சுல்தான் பத்தேரியில் வாகன பேரணியில் பிரியங்கா காந்தி ஈடுபட்டுள்ளார். அவருடன் அவரது சகோதரரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்ற மாலையுடன் அங்கு பிரசாரம் ஓய்கிறது. 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.