கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட பிரியங்கா காந்தி அபார வெற்றி பெற்றார். அவர் இன்று மக்களவையில் எம்.பியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் ஓம்பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்கும்போது அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி பதவி ஏற்றார். அப்போது அவர் கேரள பெண்கள் போல சேலை அணிந்திருந்தார். பதவி ஏற்றுக்கொண்டு வந்த அவர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அண்ணன் ராகுலுக்கு வணக்கம் தெரிவித்தார்.