Skip to content
Home » ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

  • by Authour

வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன் மக்களவையில் தனது கன்னி பேச்சை பேசினார். அவர் பேசியதாவது:

நமது அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் பாதுகாப்பு கவசம். குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் கவசம், நீதி, ஒற்றுமை, பேச்சு சுதந்திரம் உரிமை ஆகியவற்றின் கவசம். ஆனால் 10 ஆண்டுகளில், ஆளும் தரப்பு இந்த கவசத்தை உடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது வருத்தமளிக்கிறது. அரசியல் சட்டம், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை உறுதியளிக்கிறது. குறுக்கு வழியில் நுழைவது, தனியார்மயமாக்கல் மூலம், இந்த அரசு இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயல்கிறது.

தேர்தல் முடிவு வேறு மாதிரி இருந்திருந்தால் அரசியல் சட்டத்தை மாற்றும் பணியை அவர்கள் தொடங்கியிருப்பார்கள். நாட்டின் அரசியலமைப்பை இந்த நாட்டு மக்கள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என்பதை இந்தத் தேர்தல்களில் அறிந்து கொண்டதால்தான் அவர்கள் அரசியல் சாசனத்தைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள் என்பதே உண்மை.

கிட்டத்தட்ட தோல்வியடைந்த நிலையில், இந்த தேர்தல்களில் வெற்றி பெற்றதால்தான் அரசியலமைப்பை மாற்றுவது பற்றிய விவாதங்கள் இந்த நாட்டில் வேலை செய்யாது என்பதை அவா்கள் உணர்ந்துள்ளனர்.

எவருடைய பெயரை [நேரு] நீங்கள் பேசத் தயங்குகிறீர்களோ, அவர் ஏற்படுத்திய HAL, BHEL, SAIL, GAIL, ONGC, NTPC, ரயில்வே, ஐஐடி, ஐஐஎம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பல பொதுத்துறை நிறுவனங்களை புத்தகங்களில் இருந்து துடைக்க முடியும், ஆனால் இந்த தேசத்தின் சுதந்திரத்தில், இந்த தேசத்தை கட்டியெழுப்புவதில் அவரது  பங்கு ஒருபோதும் மறைக்க முடியாதது. எல்லாப் பழியையும் நேரு மீது சொல்லும் நீங்கள் ஏன் நிகழ்காலத்தைப் பற்றி பேசவில்லை? விவசாயச் சட்டங்கள் அதிகாரம் படைத்தவர்களுக்காக உருவாக்கப்பட்டவை. அரசு அதானிக்கு சாதகமாக உள்ளது. அரசியல் சட்டம் தங்களை பாதுகாக்கும் என்று மக்கள் நம்பினர், ஆனால் தற்போது அந்த நம்பிக்கையைஇழந்துவிட்டனர். ஒரு நபரைக் [அதானியை] காப்பாற்ற 1.4 பில்லியன்[ 140 கோடி] மக்கள் புறக்கணிக்கப்படுவதை நாடு கவனித்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *