Skip to content
Home » பிரியங்கா வேட்புமனு தாக்கல்……வேட்பாளரும், தேர்தல் அதிகாரியும் ஒரே நிறத்தில் உடை

பிரியங்கா வேட்புமனு தாக்கல்……வேட்பாளரும், தேர்தல் அதிகாரியும் ஒரே நிறத்தில் உடை

  • by Senthil

கேரளா மாநிலம் வயநாடு , உ.பி. மாநிலம் அமேதி தொகுதிகளில் வெற்றிபெற்ற  ராகுல் காந்தி,  வயநாடு எம்.பி  பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து  வயநாட்டில் வரும் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

இதற்காக நேற்று பிரியங்கா காந்தி தனது குடும்பத்துடன் வயநாடு வந்தார். இன்று காலை 11 மணி அளவில்  ராகுல் காந்தியுடன் அவர் ரோடு ஷோ (வாகன அணிவகுப்பு) நடத்தினார்.அப்போது அங்கு நடைபெற்ற காங்கிரஸ் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி பேசியதாவது:

“35 ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகிறேன். 17 வயதில் எனது தந்தைக்காக  வாக்குசேகரித்தேன்.

பலமுறை கட்சி நிர்வாகிகளுக்காக பரப்புரை செய்துள்ளேன். முதல்முறையாக இப்போது எனக்காக பரப்புரை செய்கிறேன். உங்களுக்கு சேவையாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் உண்மையும், அகிம்சையும் எனது சகோதரர் ராகுல் காந்தியை அன்பிற்காகவும், ஒற்றுமைக்காகவும் இந்தியா முழுவதும் 8,000 கிமீ நடைபயணம் மேற்கொள்ள தூண்டியது.

உங்கள் ஆதரவு இல்லாமல் அவரால் அதைச் செய்திருக்க முடியாது. நீங்கள் அவருடன் இருந்தீர்கள். தொடர்ந்து போராடுவதற்கு உங்கள் பலத்தையும் தைரியத்தையும் கொடுத்தீர்கள். என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்தி  கலெக்டர் அலுவலகத்தை அடைந்த  பிரியங்கா காந்தி அங்க கலெக்டர்  மேகாஸ்ரீயிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்கு பிரியங்கா  வைலட் கலர் சேலை, ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் மேகாஸ்ரீயும் அதே நிறத்தில் சேலை, ஜாக்கெட் அணிந்திருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!