காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் உதவியாளரா இருந்தவர் தஜிந்தர் சிங், திடீரென அக்கட்சியில் இருந்து விலகிய அவர் சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சி செயலாளராக பதவி வகித்து வந்த, தஜிந்தர் சிங் இன்று தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அளித்தார். ராஜினாமா செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவர் டில்லியில் உள்ள பா.ஜ., கட்சி தலைமையகத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் தஜிந்தர் சிங் கூறியதாவது: கிட்டத்தட்ட 35 வருடங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். இன்று காங்கிரஸ் கட்சி இருந்து விலகிவிட்டேன். யாருக்கும் எதிராக நான் பேச விரும்பவில்லை. மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக, நான் பா.ஜ.,வில் இணைந்துள்ளேன் என்றார்.