Skip to content
Home » ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை… அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்…

ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை… அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்…

  • by Senthil

கரூர் தான்தோன்றி மலை பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது முகாமில் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெற்றனர் இதில் 5,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு முகாம்களை பார்வையிட்டார் பின்னர் முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மேடையில் பேசுகையில்: மேடைக்கு முன்பாக அமர்ந்து இருக்கக்கூடிய அனைத்து இளைஞர்களுக்கும் முதல் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் எத்தனை அரசு நிகழ்ச்சிகளில் வந்த மகிழ்ச்சியை விட வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெற்று

வேலை பெறுபவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கக்கூடிய மகிழ்ச்சி என்பது வாழ்நாளில் மிகப்பெரிய ஒரு மகிழ்ச்சி

ஒவ்வொரு முறையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அந்த பணி நியமனம் பெறுகின்ற பொழுது அந்த ஆணை பெறக்கூடிய அவர்களுடைய முகத்தில் இருக்கக்கூடிய அந்த சந்தோஷங்களை பார்க்கின்ற பொழுது மகிழ்ச்சியாகும்

தமிழக முதல்வர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஏற்று பல்வேறு தொழிற்சாலைகளை தமிழகத்திலே உருவாக்கி வருகின்றார்கள் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய அந்த முயற்சிகளை ஆட்சி பொறுப்பேற்ற முதல் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

கரூர் மாவட்டத்தை பொருத்தவரை பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கின்ற குறிப்பாக ஏழு தனியார் துறையினுடைய மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்களும் 53 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு ஏறத்தாழ இந்த 60 முகாம்கள் 1425 தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெற்றிருக்கின்றன இதில் மட்டும் வேலை வாய்ப்புகளை பெற்றவர்கள் ஏறத்தாழ 5071 நிறுவனங்கள் இருந்து வேலை வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள்.

தமிழக முழுவதும் 2021 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் இந்த வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறார் என்று சொன்னால் மக்களுக்காக உழைக்கக்கூடிய அரசாக மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த கொண்டிருக்கின்றார்கள்.

பல்வேறு நிறுவனங்கள் இங்கே பங்கு பெற்று இருக்கின்றன நாம் அனைவருமே இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களை தேர்வு செய்து மூன்றிலுமே பணியை பெற்று விட்டு வீட்டிற்கு சென்று எந்த நிறுவனங்களிலே நாம் சேரலாம் என்று சிலர் முடிவெடுப்பார்கள் அவ்வாறு இல்லாமல் இறுதி முடிவை எடுத்து எந்த நிறுவனத்தை நாம் தேர்வு செய்கிறோம் என்ற ஒரு பணியாணியை பெறுகின்ற பொழுது மற்றவர்களுக்கு நாம் மீதம் இருக்கக் கூடிய வாய்ப்புகளை வழங்கக்கூடிய நிகழ்வாக அமையும் என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும்.

மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை வழங்கக்கூடிய திட்டத்தை இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய வகையில் தமிழகத்திலே தொடங்கி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். பல ஆண்டுகளாக பதிவு செய்து காத்திருந்த விவசாயிகள் தங்களுக்கு வாழ்நாளில் இலவச மின் இணைப்பு கிடைக்காதா என்று ஏக்கத்தோடு இருந்த விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் மின் இணைப்புகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

கரூரில் ஒரு ஐடி பார்க் வேண்டும் என்ற அந்த கனவை மாட்டும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்ற உடனே கரூர் மாவட்டத்திற்கு அந்த ஒரு சிறப்பு திட்டத்தை வழங்கியுள்ளார் கரூர் மாவட்ட மக்களின் சார்பாக கோடான கோடி நன்றியை இந்த நேரத்திலே பணிவன்போடு சமர்ப்பித்துக்கொண்டு முதலமைச்சர் உடைய திட்டங்களை விரைவாக செயல்படுத்தக்கூடிய வகையில் துணை முதலமைச்சர் திட்டங்களை விரைவாக முடித்து விட வேண்டும் என்று பல்வேறு உத்தரவுகளை வழங்கி இருக்கின்றார் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!