Skip to content

வாணியம்பாடி அருகே தனியார் பள்ளி காவலாளி குத்திக்கொலை…..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி இக்பால் சாலையில் உள்ள தனியார் நர்ஸரி, பிரைமரி பள்ளியில் காவலாளியாக பணியாற்றும் முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்த இஃர்பான் என்பவர் இன்று காலை மிதிவண்டியில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இஃர்பானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்,

உடனடியாக தகவலறிந்து சென்ற வாணியம்பாடி நகர காவல்துறையினர் இஃர்பானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக

வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து வாணியம்பாடி துணை காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் இக்கொலைச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தனியார் பள்ளியிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!