முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளிகள் தொழிற்சாலைகளுக்கான தீ பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான போலி ஒத்திகை பயிற்சி வெள்ளனூரில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் தீ பாதுகாப்பு மற்றும் பேரிடர் கால விழிப்புணர்வு தொடர்பான போலி ஒத்திகை பயிற்சி நிலைய
அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.நிலை அலுவலர் போக்குவரத்து மகேந்திரன், சிறப்பு நிலை அலுவலர் பாரதி மற்றும் வீரர்கள் ராபர்ட் கென்னடி .சையது அசாருதீன், அருண்ராஜ், லோகநாதன், பிரகாஷ் ஆகியோர்கள் தீ தடுப்பு பேரிடர் கால போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தார்கள். இந் நிகழ்வினை பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினார்கள்