Skip to content
Home » கரூரில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்… அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு…

கரூரில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்… அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு…

  • by Senthil

தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், கரூர் அரசு கலைக்கல்லூரியில் 19.10.2024 சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெற வேண்டுகிறேன் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

200 க்கும் மேற்பட்ட முண்னனி தனியார் துறை நிறுவனங்கள்

10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள்

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகள்

அரசு போட்டித்தேர்வு – இலவச பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்தல்

தகுதியுடைய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு

உதவித்தொகை விண்ணப்பம் அளித்தல்

www.tnprivatejobs.tn.gov.in m இணையதளத்தில் பதிவு செய்யும் வழிமுறை

கல்வித்தகுதி….

எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐ.டி.ஐ (ITI) டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல்,etc

மனுதாரர்கள் தங்களது கல்வி சான்றிதழ் நகல்கள் மற்றும்

சுயவிவர குறிப்பு Bio-Data உடன்வர வேண்டும்

கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள்  www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்த பின்பு தங்களின் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள் QR code- (Candidate Registration Form பதிவு செய்தல் வேண்டும்.

தொழில் முனைவோர்களின் நம்பிக்கை,  தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin  நல்லாசிகளுடன், இளைஞர்களின் எழுச்சி நாயகர்,  தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் Udhayanidhi Stalin  ஆசிகளுடன்,  இந்த முகாம் நடத்தப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்றிடும்படி  கரூர் மாவட்ட  திமுக செயலாளரும், மின்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!