திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தனியார் டவுன் பஸ்சுக்கும், அரசு பஸ்சுக்கும் இடையே யார் முதலில் செல்வது என்பதில் பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், தனியார் டவுன் பஸ் டிரைவர், அரசு பஸ்சுக்கு வழி விடாமல், நடு வழியில் பஸ்சை நிறுத்தினார்.
இதனால் அரசு பஸ் டிரைவர் ஹாரன் அடித்து பார்த்தார். ஆனால் தனியார் பஸ் நகரவில்லை. இதனால் அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் இருவரும் கீழே இறங்கி வந்து தட்டிக்கேட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சண்டையை மற்ற பஸ் ஊழியர்களும், பயணிகளும் வேடிக்கை பார்த்தனர்.இதனால் பஸ் நிலையததில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு போக்குவரத்தை சரி செய்ய வந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்பெக்டர் ஆகியோர் அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை கண்டித்தனர். அப்போது அவர்கள் இருவரும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் விதத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரண்டு பஸ்களின் டிரைவர், கண்டக்டர்களும் கோட்டை போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர்.