கோவை மாவட்டம் பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்வதற்காக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பொள்ளாச்சியின் முக்கிய பகுதியான காந்தி சிலை சிக்னல். புதிய பழைய பேருந்து நிலைய பகுதி, கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பாலக்காடு மற்றும் தமிழகத்தில் உள்ள பழனி திண்டுக்கல் மதுரை உட்பட பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு செல்வதற்காக வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளுக்கு முன்புறம் தனியார் விளம்பர நிறுவனங்களின் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். மேலும் வழி தெரியாமல் நின்று விசாரிக்கும் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊர்களின் பெயர்களை மறைத்து வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பர பலகைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.