திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியொருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி அரியமங்கலம் ரயில்நகர், அப்துல்கலாம் ஆசாத்நகர் பகுதியை சேர்ந்தவர் ரா. விஜய் (29) இவரும், இவருடைய நண்பர்களும் கடந்த 16}ந்தேதி கல்லணை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த உதயகுமார் (49) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரம் பறித்தனர். இது தொடர்பாக, திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து, விஜய் உள்ளிட்டோரை நவம்பர் 19 ம் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந் நிலையில் கடந்த புதன்கிழமை இரவு, மத்திய சிறை வளாகத்தில் இருந்த சுவர்க் கடிகார கண்ணாடியை உடைத்து, அந்த கண்ணாடித் துண்டால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்டு சக கைதிகள் சத்தமிட்டு அலறினர். உடனடியாக சிறை அலுவலர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.