திருச்சி மத்திய சிறை வளாகத்தில் 2 ஏக்கர் நிலத்தில் கைதிகள் செங்கரும்பு சாகுபடி செய்திருந்தனர். பொங்கல் பண்டிகைக்காகவே இதனை சாகுபடி செய்திருந்த கைதிகள் 20 பேர் நேற்று கரும்பை அறுவடை செய்திருந்தனர். சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி இந்த பணியை மேற்பார்வை செய்தார். வெளியில் விவசாயிகள் சாகுபடி செய்வதை விட கைதிகள் சாகுபடி
செய்திருந்த கரும்புகள் திரட்சியாக, 7 அடி உயரம் வரை வளர்ந்திருந்தது.
அந்த கரும்புகளை 10 கரும்புகள் கொண்ட கட்டுகளாக கட்டி சிறைச்சாலை முகப்பில் உள்ள பிரிசன் பஜாரில் விற்பனைக்காக வைத்தனர். 10 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.150 என நிர்ணயித்து விற்பனையை தொடங்கினர். கரும்புகள் வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே விற்பனை களைகட்டியது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் கைதிகளுக்கும் சம்பளமாக வழங்கப்படும்.