புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19) என்ற வாலிபரையும் விவேகானந்தன் (57) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இரண்டு குற்றவாளிகளையும் முதல்முறையாக புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி நீதிபதி சுமதி முன் போலீஸார் ஆஜர்படுத்தினர். செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்டதற்கு இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை நாளை (செப் 17-ம்) தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாளை வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டிய நிலையில் தான் விவேகானந்தன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அவரது உடலை மீட்ட சிறை அதிகாரிகள் காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காலாப்பட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.