திருச்சி மாநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் சங்கத்தின் தலைவர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது அலெக்சாண்டர் வரவேற்றார் செயலாளர் கோபி சிறப்புரையாற்றினார் பொருளாளர் ரவீந்திரன் நிதிநிலை அறிக்கை வாசித்தார் 202ஐந்து ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளாக தலைவர் கோபிநாத், செயலாளர் கல்பனா கோபி, பொருளாளர் ரவீந்திரன், துணைத் தலைவர் பிரகாஷ், துணை செயலாளர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜான்சன், மரிய சூசை, லட்சுமணன், சுந்தரபாண்டியன், சதீஷ்குமார், அலெக்ஸாண்டர், முருகேசன், ராமலிங்கம், சாமிநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் வக்கீல் முருகானந்தம்,தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் வழக்கறிஞர் பானுமதி, பு.ஜ.தொ.மு.பொதுச் செயலாளர் உத்திராபதி தலைவர் சுந்தரராசு துணை தலைவர் ரவி புரட்சிகர மக்கள் அதிகாரம் மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் முடிவில் ஆட்டோ தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.கூட்டத்தில்,தமிழக அரசு ஆட்டோ மீட்டர் செயலியை உருவாக்கி புதிய மீட்டர் கட்டணங்களையும் செய்து தர வேண்டும்,ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலவாரிய பலன்களை இரு மடங்காக்கி வழங்கிட வேண்டும்,,அனைத்து ஆட்டோ தொழிலாளர் தொழிலாளர்களுக்கும் அரசே வீடு கட்டி கொடுக்க வேண்டும்,மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்,பஞ்சப்பூரில் அமைய இருக்கும் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு மத்திய பேருந்து நிலையத்தை மாற்றும் போது இப்பகுதியில் உள்ள அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் முதல் முன்னுரிமை வழங்க வேண்டும்,திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பஞ்சப்பூரில் முன்னுரிமை வழங்க வேண்டும்…. திருச்சி ஆட்டோ தொழிலாளர்கள் தீர்மானம்…
- by Authour
