திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசினர் கலைக்கல்லூரி முதல்வராக இருந்த கீதா, கல்லூரி கல்வி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். இவர் மீது எழுந்த புகார் காரணமாக இவரை உயர்கல்வித்துறை சஸ்பெண்ட் செய்தது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரி்வித்து இன்று காலை மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி முதல்வர் கீதா, ஒரு யூ டியூப் சேனல் நடத்தி வருவதாகவும், அதில் வேலை நாட்களில் அவர் பல்வேறு வித கருத்துக்களை பகிர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் கல்லூரி கல்வி இயக்குனர் பதவிக்காக நான் எவ்வளவு பணம் கொடுத்தேன் என்பது குறித்தும் அவர் பலரிடம் கூறி வந்தாராம். இதனால் தான் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.