இந்தியாவுடன் மூன்று போர்களுக்குப் நாங்கள் பாடங்களைக் கற்றுக்கொண்டதாகவும், இந்தியாவுடன் சமாதானத்தை விரும்புவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் செரீப் சமீபத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் மந்திரி ஹினா ரப்பானி கர் டாவோஸில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:- இரு நாடுகளுக்கு இடையே அமைதிக்கான முயற்சியில் ஈடுபட இந்திய பிரதமர் நரேந்திர மோடியை “பங்காளியாக” தனது நாடு காணவில்லை என்று கூறினார். மேலும் அவர் கூறும் போது மோடியைப் போலல்லாமல், பாகிஸ்தான் மன்மோகன் சிங் மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோரை பங்காளிகளாக கண்டது. நான் வெளியுறவு மந்திரியாக இந்தியாவுக்குச் சென்றபோது, சிறந்த ஒத்துழைப்பை வலியுறுத்த நான் மிகவும் கடினமாக உழைத்தேன், 2023 ஆம் ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிடும்போது அப்போது நாங்கள் மிகவும் சிறந்த நிலையில் இருந்தோம். இது தெற்காசிய பிரச்சனை அல்ல, இது இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை மற்றும் இந்தியாவின் பக்கத்திலிருந்தும் அங்கும் பிரச்சனை என்பதை புரிந்துகொள்வோம்.
அவர் தனது நாட்டுக்கு நல்லவராக இருந்தாலும், பிரதமர் நரேந்திர மோடியை நாங்கள் பங்காளியாக காணவில்லை. பாகிஸ்தான் கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொண்டது, மேலும் முன்னேற விரும்புகிறது. இந்தியா ஒரு காலத்தில் அனைத்து மதங்களும் இணைந்து வாழ்ந்த தேசமாக இருந்தது, ஆனால் அது இப்போது இல்லை. பாகிஸ்தானில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நான் கூறவில்லை, ஆனால் சிறுபான்மையினர் புதிய சட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த எங்கள் அரசாங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என கூறினார்.