மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தில் நடந்த விபத்தில் பிரபல சாமியார் கனக் பிகாரி தாஸ் ஜி மகாராஜ் உயிரிழந்தார்.இந்த விபத்தில் இந்த விபத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த பயங்கர விபத்து இன்று காலை 8 மணியளவில் நடந்து உள்ளது. பிகாரி தாஸ் ஜி மகாராஜ் தனது சீடர்களுடன் காரில் பர்மானிலிருந்து சிந்த்வாராவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். நரசிங்பூர் அருகே கார் வரும் போது பைக் ஒன்றின் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது இதில் சாமியாரும் மூன்று பக்தர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாமியாரின் மறைவுக்கு முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் முன்னாள் முதல் மந்திரி கமல்நாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
