Skip to content
Home » திருமணம் முடிந்த 21வது நாள் புதுப்பெண் கொலை….தற்கொலை நாடகமாடிய கணவன் கைது

திருமணம் முடிந்த 21வது நாள் புதுப்பெண் கொலை….தற்கொலை நாடகமாடிய கணவன் கைது

கோவை சிறுவாணி சாலையில் உள்ள மத்தவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சஞ்சய். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த செல்வபுரத்தைச் சேர்ந்த ரமணி என்ற இளம் பெண்ணை கடந்த எட்டாம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை ரமணி பெற்றோர் ஏற்கவில்லை. சஞ்சையின் பெற்றோர் ஏற்றுக் கொண்டதால் புதுமணத் தம்பதி சஞ்சய் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 29 ம் தேதி ரமணி மூச்சு திணறலுடன் படுக்கை அறையில் கிடந்ததாக கூறி புலுவாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கணவர் கொண்டு சென்றார். அவரை

பரிசோதிக்க மருத்துவர்கள் ஏற்கனவே ரமணி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவருடைய உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே ரமணியின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் அவரை அடித்து கொலை செய்து விட்டனர் என்றும் உறவினர்கள் ரமணியின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து உறவினர்கள் உடலை வாங்கி சென்றனர்.

மேலும் மர்மமான முறையில் உயிரிழந்த ரமணியின் கழுத்து கையில் காயம் இருப்பதாக கூறப்பட்டது. எனவே இது தொடர்பாக ஆலந்துறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வந்தார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது அந்த அறிக்கையை தொடர்ந்து ரமணியின் கணவர் சஞ்சயிடம் பேரூர் காவல்துறை துணை ஆணையர் ராஜபாண்டி விசாரணை நடத்தினார்.

அத்துடன் ரமணியின் தந்தை சஞ்சயின் தந்தை மற்றும் தாய் ஆகியோரிடம் அவர் தனித் தனியாக விசாரணை நடத்தினார்.  ராஜபாண்டி  நடத்திய தீவிர விசாரணையில்  கணவர் சஞ்சய், மனைவி ரமணி கழுத்தை நெரித்து கொன்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. திருமணம் முடிந்த நிலையில் சஞ்சய் வேறொரு பெண்ணுடன் போனில் பேசி வந்துள்ளார். இது குறித்து சம்பவத்தன்று கணவனுக்கும், மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த சஞ்சய் மனைவி ரமணியின் கழுத்தை பிடித்து நெரித்து உள்ளார். இதனால் அவர் மயங்கி விழுந்து இறந்து உள்ளார். இது குறித்து தனது பெற்றோரிடம் கூறும் போது மகனின் கொலையை மறைக்க ரமணியின் வாயில் சாணி பவுடரை தெளித்து தற்கொலை செய்தது போல் நாடகமாடி உள்ளனர். இந்த தகவல் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சஞ்சய் அவருடைய தந்தை லட்சுமணன், தாய் அம்முகுட்டி என்ற பக்ரு நிஷா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *