Skip to content

மயிலாடுதுறை புதுப்பெண் அடித்துக்கொலை……திருமணமான 3 மாதத்தில் கொடூரம்

மயிலாடுதுறை அருகே   உள்ள நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான ஜெனிபர்(23)  இவரது உறவினரான மார்ட்டின் ராஜ் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது மூத்த மகள் இருக்கும் போது இளைய மகளுக்கு திருமணம் செய்ய ஜெனிபர் குடும்பத்தினர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில் அவர்களை சமாதானம் செய்து கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்த நிலையில் 10 நாட்கள் மட்டுமே மணப்பெண்ணுடன் குடும்பம் நடத்திய மார்ட்டின் ராஜ், அப்போதே வெளிநாடு வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜெனிபரின் அக்காவுக்கு நேற்று பருத்தியூர் தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு ஜெனிபர், அவரது மாமியார் இருதய மேரி, நாத்தனார் வென்சியா மேரி ஆகியோர் சென்றுள்ளனர்.

அப்பொழுது ஜெனிபரின் அக்காவிற்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை பார்த்து பிரமித்து அவர்களது செல்போனில் புகைப்படம் எடுத்த மாமியாரும், நாத்தனாரும் நீ ஒன்னும் இல்லாமல் வந்தாயே என்று
அங்கேயே கடும் சண்டைபோட்டு ஜெனிபரை அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டிற்கு தொலைபேசியில் பேசிய ஜெனிபர் அக்காவிற்கு மட்டும் இவ்வளவு சீர்வரிசை பொருட்களை உன் குடும்பத்தார் செய்துள்ளனர் உனக்கு மட்டும் ஏன் சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என சொல்லி கொடுமைப்படுத்தியதுடன்.
கடுமையாக தாக்கியதாக தொலைபேசியில் தெரிவித்த போது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் பதற்றம் அடைந்த ஜெனிபர் குடும்பத்தினர் தங்கள் மகனை ஜெனிபர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அங்கு ஜெனிபர் பேச்சு மூச்சு இன்றி மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்வம் குறித்து காவல் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.இந்நிலையில் ஜெனிபரின் சாவுக்கு காரணமான அவரது மாமியார் இருதயமேரியை கைது செய்ய வலியுறுத்தி ஜெனிபரின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாமியாரும் அவரது உறவினர்களும் சேர்ந்து  ஜெனிபரை அடித்து கொன்று விட்டார்கள் என  ஜெனிபர் குடும்பத்தினர்  குற்றம் சாட்டினர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். கோட்டாட்சியரின் விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் அர்ச்சனா தெரிவித்ததன்பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!