வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு-இலங்கை கடலோர பகுதியை நோக்கி நகரக் கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு முதல் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, புதுக்கோட்டை, சிவங்கை , கடலூர் விழுப்புரம் உள்பட 6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை சில இடங்களில் 20 செ. மீ. மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 20 செ.மீ. என்பது ரெட் அலர்ட் ஆகும். தற்போது இந்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 1050 கி.மீ. தொலைவில் உள்ளது.