நாகையில் உள்ள மீன்வள பல்கலைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டி அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை கவர்னர் கிடப்பில் போட்டார். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் நாகை மீன்வள பல்கலைக்கு ஜெயலலிதா பெயர் சூட்டவேண்டும் என தீர்மானம் நி்றைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அதை கவர்னர் ரவி, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். அந்த தீர்மானத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு நிராகரித்து விட்டார். இதற்கான தகவல் கவர்னர் மாளிகைக்கு வந்துள்ளது. இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெயலலிதா ஆட்சியை பி்ரதமர் பாராட்டி உள்ளார். ஆனால் அவரது பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு அனுமதி மறுக்கிறது என அதி்முகவினர் கூறுகிறார்கள்.
நாகை மீன்வள பல்கலைக்கு ஜெயலலிதா பெயர்…… நிராகரித்தார் ஜனாதிபதி முர்மு
- by Authour
