ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 20-ம் தேதி, தனது பிறந்த நாளுக்காக டில்லியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயிலில் வழிபட்டார். கருவறைக்கு வெளியே நின்று வழிபட்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், அதே கோயிலின் கருவறையில் வேறு ஒரு நபர் நின்று வழிபட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் என கூறப்படும் நிலையில், குடியரசுத் தலைவர் புகைபடத்தையும் ஒப்பிட்டு தலித் வாய்ஸ் என்ற அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. பிரதமரை விட உயர் அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை அனுமதிக்காமல், அர்ச்சகர்களும், அஸ்வினி வைஷ்ணவ் மட்டும் அனுமதிக்கலாமா என கேள்வி எழுப்பி சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால், கோயில் சடங்குகள் படியே அட்டவணை தயாரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள கோயில் நிர்வாகம், பக்தர்களுடன் தரிசனம் செய்ய குடியரசுத் தலைவர் விரும்பியதாகவும், கருவறைக்குள் செல்ல அவர் விரும்பியிருந்தால் பூசாரிகள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றும் விளக்கம் அளித்துள்ளது.