கொல்கத்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு இந்தியா முழுவதும் கண்டனம் கிளம்பி உள்ளது. இந்த சம்பவத்திற்கு இப்போது ஜனாதிபதி முர்முவும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக ஜனாதிபதி கூறியிருப்பதாவது:
கொல்கத்தா சம்பவம் அதிர்ச்சி அளித்தது. நீதிகேட்டு மக்கள் போராடும்போது குற்றவாளிகள் சுதந்திரமாக திரிகிறார்கள். தங்களது மகள், சகோதரிக்கு இந்த நிலை ஏற்படுவதை யாரும் அனுமதிக்கமாட்டார்கள். சமூகம் தன்னை நோக்கிய சில கடினமான கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும். நிர்பயாவுக்கு பிறகு 12 ஆண்டுகளில் பல வன்கொடுமைகளை சமூகம் மறந்து விட்டது. உண்மையை ஏற்றுக்கொள்ள மறந்து சமூகம் கூட்டு மறதியை கையாளுகிறது. அறிவு, திறமையில் பெண்களை குறைவாக மதிப்பிடும் மனநிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.