Skip to content

ஜனாதிபதி விருந்தில் பங்கேற்க அதானி உள்பட 500 தொழில் அதிபர்களுக்கு அழைப்பு

  • by Authour

இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் உச்சி மாநாடு டில்லியில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.  இந்தியா தலைமை தாங்கி நடத்தும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதைப்போல உறுப்பினர் அல்லாத பல்வேறு நாடுகளும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றன.  ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் தலைவர்கள் டில்லிக்கு வரத்தொடங்கி விட்டனர். இதனால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி நாளை இரவு ஜனாதிபதி அளிக்க உள்ள விருந்தில் பங்கேற்க கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், குமார் மங்கலம் பிர்லா, ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல், மகேந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட 500 தொழிலதிபர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!