Skip to content
Home » முதல்வர் ஸ்டாலினுக்கு…….ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து

முதல்வர் ஸ்டாலினுக்கு…….ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசியில்அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு: “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிடவும் வாழ்த்துகிறேன்.

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்: “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டிற்கு சேவையாற்றிட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்திட வாழ்த்துகிறேன். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமித்ஷாவிற்கு முதல்-அமைச்சர் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *