கேப்டன் விஜயகாந்த்துக்கு மியாட் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் அவர் மூச்சு விடுவதில் சிரமப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. அப்போது மனைவி பிரேமலதா மற்றும் 2 மகன்களும் அருகில் இருந்தனர். விஜயகாந்த்த உயிரை காப்பாற்ற முடியவில்லை. அவர் உயிர் பிரிந்து விட்டது என மருத்துவர்கள் அறிவித்ததும் பிரேமலதாவும், மகன்களும் கதறி துடித்தனர்.
சிறிது நேரத்தில் இந்த செய்தி மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் பரவியதால் அவர்களும் கதறி அழுதனர். பின்னர் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்லாயிரகணக்கான தொண்டர்கள் கதறி துடித்த காட்சி நெஞ்சை பிழிவதாக இருந்தது.
9.45 மணி அளவில் நடிகர் தியாகு, விஜி விஜி போயிட்டியா என கதறி அழுதபடி விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். இனி எங்களுக்கு யார் இருக்கா என உரத்த குரலில் அவர் சத்தம் போட்டு கதறினார்.