தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று சென்னையில் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு கொடுத்தார். அதில் கள்ளக்குறிச்சி சாராய சாவுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். பிரேமலதாவுடன் அந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கவர்னரை சந்திக்க சென்றிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா கூறும்போது, “விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்குமாறு கவர்னரிடம் மனு அளித்தோம். கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இருந்தும் கள்ளச்சாராயம் எப்படி வந்தது? பின்னர் எதற்கு டாஸ்மாக் செயல்படுகிறது?ஆட்சியாளர்கள், காவல்துறையினர் துணை இல்லாமல் நிச்சயமாக இந்த தவறு நடந்து இருக்காது. ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் உதவியோடு தான் கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு, விற்கப்படுகிறது’ என்றார்.