தூத்துக்குடி வெள்ளபாதிப்பு பகுதிகளில் கனிமொழி எம்.பி. கடந்த 5 நாட்களாக தீவிரமாக நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு உள்ளார். அவர் வெள்ளப்பகுதிகளுக்கு படகுகளில் சென்று நிவாரணப்பொருட்களை வழங்கினாா். இன்று காலை அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு பைக்கில் சென்று பார்வையிட்டு தேவையான நிவாரணப்பொருட்களை வழங்கினார். அப்போது நிவாரண உதவி வாங்க ஒரு நிறைமாத கர்ப்பிணியும் வந்தார். அவரைப்பார்த்த கனிமொழி அவரிடம் பரிவுடன் விசாரித்து, உடனடியாக நிவாரணப்பொருட்களை வழங்கி அனுப்பி வைத்தார். அத்துடன் அவரது முகவரி மற்றும் குடும்ப விவரங்களையும் கேட்டறிந்தார்.