தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜயை, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இன்று சந்தித்து பேசினார். பனையூரில் உள்ள அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் உடன் இருந்தார்.
வரும்2026 சட்டமன்ற தேர்தல் பிரசார பணியை பிரசாந்த் கிஷோரிடம் ஒப்படைக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன் பேரில் இந்த சந்திப்பு நடந்தது. தேர்தலில் எப்படி பிரசாரம் செய்ய வேண்டும் , அதற்கான தொகை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.