நடிகர் விஜயின் தவெக வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அந்த கட்சி , தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோரை அணுகி உள்ளது. நேற்று பிரசாந்த் கிஷோர், விஜய்யுடன் பனையூர் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆனந்த், ஆதவ் ஆர்ஜூனாவும் உடன் இருந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் 2026 தேர்தல் பணி செய்ய பிரசாந்த் கிஷோா் சம்மதம் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் இன்று ஆதவ் ஆர்ஜூனா இல்லத்தில் ஆலோசனை நடந்தது. இதில் பிரசாந்த் கிஷோர், புஸ்சி ஆனந்த், ஜான் ஆரோக்கிய சாமி ஆகியோரும் பங்கேற்றனர். தேர்தல் பரப்புரை குறித்து கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது.