பீகார் மாநில சட்டசபை இடைத்தேர்தலில் 4 தொகுதியிலும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் பிகாரி சமூகத்தினர் மத்தியில் பேசியதாவது.. பீகார் உண்மையில் தோல்வி அடைந்த மாநிலம். மாநில வளர்ச்சிக்கு மிகப்பெரிய முயற்சிகள் தேவை. எனது கட்சி 2025ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனது கணிப்பு படி நாங்கள் வெற்றி பெறுவோம். 2030ம் ஆண்டிற்குள் பீகாரை நடுத்தர வருமானம் கொண்ட மாநிலமாக மாற்றுவது ஒரு பெரிய சவாலாக இருக்கும். பீகார் மாநிலத்தில் வளர்ச்சியை உருவாக்க வேண்டும். பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்கு எனது கட்சி முன்னுரிமை அளிக்கும். இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தாலும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனது கட்சி செய்த நல்ல விஷயங்கள் இறுதியில் பலனை தரும். தற்போதைய மதுவிலக்கு பயனற்றது. மதுவிலக்கு ரத்து செய்யப்படும்.. என்றார்..