பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படுபவை பிரம்ம கமலம் பூக்கள். இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும் இந்த பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலைக்குள் உதிர்ந்து போகும். அத்துடன் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் நறுமணம் வீசும். ஒரே செடியில் 10க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடியது.பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. ஏனென்றால் இந்த பூ இரவு நேரத்தில் பூத்து விடிவதற்குள் உதிர்ந்து விடும்.
இந்த அதிசய பூவின் நடுவில் பார்த்தால் பிரம்மா படுத்திருப்பது போன்றும். அதன் மேல் நாகம் படம் எடுத்திருப்பது போன்றும் காணப்படும். இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அந்த மலர் மலரும் போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக வரமாக கிடைக்கும் என்பதுஐதீகம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடைவீதியில் சபாநாயகர் முதலியார் இந்து மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் நிர்வாக அலுவலர் தங்கவேல் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பிரம்ம கமலம் பூ பூத்தது.
இந்த செடி நடப்பட்டு 5-ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம், இரவு10 மணி அளவில் மலர தொடங்கிய பிரம்ம கமலம் பூ, 12 மணிக்கு முழுவதுமாக மலர்ந்தது. அதன் பிறகு 1 மணிக்கு மேல் மூடத்தொடங்கியது. பிரம்மகமலம் செடியில் பூக்கும் பூவானது. விடிவதற்குள் வாடி விடும் தன்மை கொண்டது. இந்த பூ பூக்கும் போது மிகுந்த நறுமணம் வீசியது. இதை, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.