விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் பிரபாகரன் தொடர்பான தகவல்களை மத்திய, மாநில அரசுகளில் உளவுத்துறையினர் திரட்ட ஆரம்பித்துள்ளனர். பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல்கள் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது..