திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் பொய்கைமலை அடிவாரம்(கீழ்பாகம்) ஸ்ரீ அலமேலு மங்கை சமேத ஸ்ரீ மாயாவதார ஸ்ரீ சீனிவாச பெருமாள் மற்றும் பாிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 24ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9 மணிக்கு மங்கள இசையுடன் பஞ்ச கக்த ஹோமம் , மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மணிதீர்த்தம் எடுக்க புறப்பாடு நடைபெறும்.
மாலை 6 மணிக்கு முதல் கால யாகபூஜை தொடங்குகிறது. அதைத்தொடா்ந்து பகவத் அனுக்ஞை, ஆச்சார்ய வர்ணம், சங்கல்பம், நைவேத்யம், வேத திவ்ய பிரபந்த சாத்துமுறை, மகா தீபாராதனை நடைபெறுகிறது.
நாளை(வியாழன்) காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை ஆரம்பமாகிறது. மாலை 4 மணிக்கு பெருமாள், தாயார் , அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் திருமஞ்சனம் நடைபெறும். மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜையும், 24ம் தேதி
(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு 4ம் கால யாகபூஜையும் நடைபெறும்.
24ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஸ்ரீ அலமேலு மங்கை சமேத ஸ்ரீ மாயாவதார ஸ்ரீ சீனிவாச பெருமாள் மற்றும் பாிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
கும்பாபிசேக விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர், நிர்வாகி வி.பி. நாகராஜன் நாயுடு, வி.பி. ஜெயக்குமார் நாயுடு, வி.பி. செந்தில்குமார் நாயுடு , டி. பிரசன்ன வெங்கடேஷ் நாயுடு, , என் . மனோஜ் நாயுடு, பரம்பரை அறங்காவலர் ஆர்.வி.எஸ். வீரமணி நாயுடு, கீழ பொய்கைப்பட்டி பெருமாள் கவுண்டர், என்.ஏ. கிருஷ்ண கவுண்டர், என். சி. தங்கராசு கவுண்டர், சின்ன நாட்டாண்மை என். மோகனநாகராஜன் நாயுடு மற்றும் திருப்பணிக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.